திருத்தணி கோட்டத்தில் 40 லட்சம் கஞ்சா பறிமுதல்: 156 பேர் கைது

திருத்தணி: திருத்தணி கோட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 40 லட்சம் மதிப்பு கஞ்சா, குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதுசம்பந்தமாக 156 பேரை கைது செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி.சிபாஸ் கல்யாண் மேற்பார்வையில், திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, அண்ணாதுரை, ராஜ், எஸ்ஐக்கள்  ஆகியோர் இணைந்து தீவிர ரோந்து பணி செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை திருத்தணி கோட்டத்தில் அடங்கிய திருத்தணி, திருவாலங்காடு, கனகம்மா சத்திரம், ஆர்கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை  நடத்தி 61 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 93 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 334 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 32 லட்சத்து 98 ஆயிரம். இதுபோல் 177 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 181 நபர்கள் கைது செய்யப்பட்டு 636 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 156 பேர் கைது செய்யப்பட்டு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹசரத் பேகத்திடம் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: