2023 மலர் கண்காட்சிக்கு தயாராகும் தாவரவியல் பூங்கா: விதை சேகரிப்பு பணிகள் தீவிரம்

ஊட்டி: அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் நடந்து வருகிறது. கோடை சீசனின் போது, ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களை, மகிழ்விப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காக்களில் காய்கறி கண்காட்சியும் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதனால், ஆண்டுதோறும் தாவரவியல் பூங்கா மற்றும் தொட்டிகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த மலர் செடிகளில் ஏப்ரல் இறுதி வாரம் முதல் பூக்கள் பூக்க துவங்கும். மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது பல வகையான வண்ண வண்ண மலர் பூத்துக் குலுங்கும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும். இதைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இந்த மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவு செய்ய தற்போது விதை சேகரிப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு பின் பூக்ககூடிய மலர் செடிகளான பென்சீனியம், பெட்டூனியம் மற்றும் சால்வியா போன்ற சில மலர் செடிகளின் விதைகள் ேசகரிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

அதேபோல், விதைகள் ேசகரிக்கப்பட்ட மலர் செடிகள் மற்றும் மழையில் அழுகிய செடிகளும் அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் பாத்திகளை சீரமைத்து விதைப்பிற்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது.ேதாட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்: 2023ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக, பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.  முதற்கட்டமாக விதைகள் சேகரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை பூக்கக் கூடிய சில மலர் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. விதைகள் சேகரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

விரைவில் விதைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். நாற்றுக்கள் தயாரானவுடன் பூக்கள் பூக்கும் மாதத்திற்கு ஏற்ப விதைகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்படும். தற்போது மேரிகோல்டு, சால்வியா, பெட்டூனியம், போர்ட்லூகா மற்றும் டெல்பீனியம் ஆகிய மலர் செடிகளின் விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. நாற்று உற்பத்தி செய்த பின், நடவு பணிகள் படிப்படியாக துவக்கப்பட்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும். அதே போல் மலர் தொட்டிகளில் விரைவில் மண் நிரப்பும் பணிகள் துவக்கப்படவுள்ளது. இதில், விதைகள் நடவு செய்யப்பட்டு மலர் செடிகளை நடவு ெசய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படும், என்றார்.

Related Stories: