கோதண்டவிளாகம் கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு: கோதண்டவிளாகம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்ட விளாகம் கிராமத்தில், காமராஜர் நகரில் 50க்கும் மேற்கண்ட குடியிருப்புகளும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். வட கிழக்கு பருவ மழையின் காரணமாக காமராஜ் நகரில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்புவதற்கு அதிக நாட்கள் ஆகும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மழைநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் ஏற்பட வாய்புள்ளதாகவும், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மின்கம்பங்கள் உள்ளதால் மின் கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சுமார் சான்கு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மழைநீர் தேங்கி நிற்கும் கோதண்ட விளாகம் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தேங்கி நிற்கும் மழை நீரை வடிகால் அமைத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: