நீர் பிடிப்பு பகுதியில் கன மழை அமராவதி ஆற்றில் இருகரையை தொட்டு செல்லும் தண்ணீர்-கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

அரவக்குறிச்சி : நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக அமராவதி அணையிலிந்து திறந்து விடப்பட்ட நீர் அரவக்குறிச்சி பகுதி அமராவதி ஆற்றில் இரு கரையையும் தொட்டுச் செல்கின்றது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையைக் கடந்து கருர் நோக்கிச் செல்லுகின்றது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4047 மில்லியன் கன அடி மொத்தக் கொள்ளவும் உள்ளது. தற்போது 88 அடி நீர் உள்ளது.

இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றது. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம் சின்னதாராபுரம், ராஜபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பல்வேறு பயிர்கள் பயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை பெய்து வரும் காரணத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து தினசரி அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.

தற்போது 88 அடிக்கும் மேல்நீர் உயரம் உள்ளது. இதனால் அமராவதி அணையிலிருந்து சராசரியாக 4000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்படுகின்றது.

இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வருவாய் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையைக் கடந்து கருர் நோக்கிச் செல்லுகின்றது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: