எலும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் உள்ள ஆதிபொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் சுவாதீனம் பெறப்பட்டது

சென்னை: எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் அருள்மிகு ஆதிபொன்னியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான 2064 சதுரடி இடம் வணிகத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த காரணத்தால் சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவுப்படி, காவல்துறை ஒத்துழைப்புடன் அந்த கட்டிடம் திருக்கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இந்த சொத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,12,80,000 ஆகும்.

Related Stories: