சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். மற்ற பிரிவினரின் இடஒதுக்கீடு சமூகநீதியின் உச்சகட்ட சிறப்பு. அனைத்து மாநிலங்களில் தமிழகத்துக்கு நிகர் தமிழகமே. அதே நேரத்தில் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோரை மேம்படுத்த முயற்சிப்பது சமூகநீதிக்கு எதிரானதல்ல. தனக்கு வேண்டும் என்று கேட்பது தவறல்ல. ஆனால் மற்றவர்களுக்கு தரக்கூடாது என்று வாதிடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறல்.
