ஆப்கன் பெண்கள் ஜிம் செல்ல தடை: தலிபான்கள் உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு அமெரிக்க படைகள் வெளியேறியது. இதையடுத்து, நாட்டின் ஆட்சி, அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது, பெண்களுக்கு சுதந்திரம், உரிமைகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி பயில்வதற்கு திடீரென தடை விதித்தனர். பெரும்பாலான அரசு, நிறுவனங்களில் பெண்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதித்தனர். பொது இடங்களில் வரும் பெண்கள் தலை முதல் கால்விரல் பகுதி வரை மூடி இருக்கும் வகையில் நடக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்நிலையில், உடற்பயிற்சி கூடங்களுக்கும் (ஜிம்) பெண்கள் செல்ல கூடாது என்று தலிபான்கள் நேற்று தடை விதித்தனர்.

Related Stories: