ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப்பகுதிகளான தங்கச்சியம்மாபட்டி, விருப்பாட்சி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை உள்பட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பூசணி நடவு செய்துள்ளனர். கடந்த மாதங்களில் இப்பகுதிகளில் பெய்த மழையினால் அதிகளவில் பூசணி அறுவடை செய்யப்பட்டது.

கடந்த வாரம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்கெட்டில் ஒருகிலோ ரூ.18-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ. 6வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘தற்போது கடந்த மாதத்தை விட 3 மடங்கு விலை குறைவடைந்துள்ளது.

விதை, நடவு, ஆட்கூலி, அறுவடை ஆகியவற்றுக்கு ஆகும் செலவு விற்பனை விலையை விட அதிகமாக உள்ளதால் பூசணிக்கு கட்டுப்படியான விலை கிடைக்கால் அவதிப்பட்டு வருகின்றோம். இனி வரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் பூசணியை செடியிலேயே விட்டுவிடலாம் என்ற நிலையில் உள்ளோம்’’ என தெரிவித்தனர்.

Related Stories: