ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் டிச. 23ம் தேதி நடைபெறும்: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் போட்டிகளில் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரும் ஒன்று. அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா ரூ.95 கோடி செலவிட்டு வீரர்களை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தொகை ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஏலத்தை போல அல்லாமல் குறைந்த அளவிலே வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது. நவம்பர் 15ம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை அந்தந்த அணி உரிமையாளர்கள் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவிடம் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு டிசம்பர் முதல் வாரத்தில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் இறுதி செய்யப்படுவர்.

இந்த ஆண்டு சென்னை, மும்பை, கொல்கத்தா, உள்பட அனைத்து அணிகளும்  முன்னணி வீரர்களை கழற்றிவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த வருடம் ஐபிஎல் ஏலம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Stories: