மணிரத்னம், வெற்றிமாறன் எடுக்க விரும்பிய படம்

சென்னை: ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ள படத்துக்கு ‘ரத்தசாட்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி, இந்தப் படம் உருவாகியுள்ளது. ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசை அமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதை இந்தப் படம் சொல்கிறது. கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆஹா ஓடிடி தளம் விரைவில் வெளியிடுகிறது. இது பற்றி ஜெயமோகன் கூறும்போது, ‘இந்த கதையை ரஃபிக் இஸ்மாயில் முன்பே என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார். அதன் பிறகு மணிரத்னம், வெற்றிமாறன் தனித்தனியே என்னை தொடர்பு கொண்டனர். இந்த கதையை படமாக்க விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் கதை உரிமையை ரஃபிக்கிற்கு கொடுத்ததை சொன்னேன்’ என்றார்.

Related Stories: