சிம்லா: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை; வெறும் சண்டைகள் மட்டுமே உள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க இயலாது, இமாச்சல பிரதேசத்தில் நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
