பாஜ மீது பிரியங்கா தாக்கு எரிபொருள் நிரப்ப மறந்த இரட்டை இன்ஜின் அரசு

உனா: ‘இமாச்சல பிரதேசத்தில் பாஜவின் இரட்டை எஞ்சின் அரசானது எரிபொருள் நிரப்புவதற்கு மறந்துவிட்டது’ என்று பாஜ தலைமையிலான மாநில அரசை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இமாச்சலப்பிரதேசத்தில் வருகின்ற 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.

உனாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகின்றது. நினைவில் கொள்ளுங்கள். இந்த தேர்தல்கள் தான் உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இங்கு மக்களுக்கு ஏன் பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்கப்பெறவில்லை. யோசித்து பாருங்கள். பாஜ தலைவர்கள் வந்து எங்களுக்கு வாக்களியுங்கள் இரட்டை எஞ்ஜின் ஆட்சி கிடைக்கும் என்பார்கள்.  அவர்கள் கடந்த ஐந்து ஆண்டாக இருந்தார்கள். அவர்கள் இன்ஜினுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு மறந்து விட்டனர்’’ என்றார்.

* காங்கிரஸ் ‘வைடு பால்’

இமாச்சலின் பைஜ்நாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘தற்போதுள்ள அரசியலை சுருக்கமாக சொல்வதென்றால் அரசியல் பிட்சில் பாஜ ஒரு அருமையான பந்து (குட் லெந்த் பால்). காங்கிரஸ் ‘வைடு பால்’. ஆம் ஆத்மி ‘நோ பால்’. காங்கிரஸ் ஆட்சியின்போது 9வது இடத்தில் இருந்த பொருளாதாரம் பிரதமர் மோடியின் தலைமையில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது’’ என்றார்.

Related Stories: