சித்தூர் மாநகராட்சி பகுதியில் ஜெகன் அண்ணா இலவச வீடு திட்ட பணிகள்-அதிகாரிகளுடன் மேயர் நேரில் சென்று ஆய்வு

சித்தூர் : சித்தூர் மாநகராட்சி மேயர் அமுதா ஜெகன் அண்ணா இலவச வீடு திட்டப்பணிகளை  அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சித்தூர் மாநகராட்சி மேயர் அமுதா, தொட்டிபள்ளி மற்றும் பண்டப்பள்ளி ஆகிய ஜெகன் அண்ணா காலனியில் இலவச வீடுகள் கட்டும் திட்டப்பணிகளை நேற்று நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் பேசுகையில், முதல்வர் ஜெகன்மோகனின் முக்கிய கனவு ஆந்திர மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்கள் யாரும் இருக்கக் கூடாது என்பதே. அதை போல் முதல்வர் ெஜகன்மோகன் முதலமைச்சர் ஆனவுடன் மாநில முழுவதும் 25 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டி வருகிறார். சித்தூர் மாநகரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு வழங்கிய பகுதிகளில் வீடுகள் கட்டி வருகிறார்கள் இல்லையா என  ஆய்வு மேற்கொண்டோம். ஒரு சிலரை தவிர அனைவரும் ஜெகன் அண்ணா இலவச வீட்டு மனை திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி வருகிறார்கள்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 75% வீடுகள் கட்டும் பணி நிறைவடையும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 100% பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே பயனாளிகளுக்கு வழங்கிய இடத்தில் உடனடியாக வீடுகள் கட்டிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். பயனாளிகளுக்கு மணல், சிமென்ட், கம்பி உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

அதனை பெற்றுக் கொண்டு மிக விரைவில் வீடுகளை கட்டி முடித்து பயனடைய வேண்டும்.  தற்போது புதிதாக இலவச வீட்டு மனை பட்டா வேண்டி ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கும் ஓரிரு மாதத்திற்குள் இலவச பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் மாநகராட்சி வீட்டு வசதி வாரியத் துறை அதிகாரி ஸ்ரீதர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொட்டிபள்ளி பண்ட பள்ளி ஆகிய பகுதிகளில் மேயர் அமுதா மாநகராட்சி வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஜெகன் அண்ணா காலனியில் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: