கேரளாவில் மிகப்பெரிய பட்ஸ் மறுவாழ்வு மையம் வல்லபுழா கிராம பஞ்சாயத்தில் ‘‘சினேக பவன்” கட்டிடம் திறப்பு-அமைச்சர் பிந்து பேசினார்

பாலக்காடு :  கேரள மாநிலத்தின் மிகப்பெரிய பட்ஸ் மறுவாழ்வு கட்டிடமான வல்லபுழா கிராம பஞ்சாயத்தில் ”சினேக பவன்” கட்டிடத் திறப்பு விழா நடந்தது.

இதில்  அமைச்சர் பிந்து பேசியதாவது: இதுபோன்ற மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை, சுகாதார நிலையம், தொழில் பயிற்சி, அதிகாரமளித்தல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

 மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையுடனும், சொந்தக் காலில் நிற்கவும், வேலைவாய்ப்பில் ஈடுபடவும் சமூக நீதித் துறை பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவை பயன்படுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளை ஆரம்பத்திலேயே கவனித்து, பிரச்னைகளைப் புரிந்துகொண்டு விலகலைசரிசெய்து முன்னேறிச் செல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்கூட்டியே கண்டறியும் மையங்கள் தொடங்கப்படும்.  அனைத்து பொது மற்றும் தனியார் இடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றப்படும்.  இதற்கான வசதிகள் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கழிவறைகளில் ஏற்படுத்தப்படும்.  

வல்லப்புழா ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணத்தை கண்டறிய சமூக நீதித்துறை உதவும்.  தீவிர ஊனமுற்றோர் மற்றும் மன-அறிவுசார் சவால்கள் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் வகையில், மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் உதவி கிராமங்கள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்எல்ஏ முகமது முகஷில் தலைமை தாங்கினார். வல்லப்புழா கிராமப்பஞ்சாயத்துத்தலைவர் அப்துல் லத்தீப், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சமூகநலத்துறை அதிகாரி ஷெரீப்ஷூஜா, குடும்பஸ்ரீ அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ், தலைமைப்பொறியாளர் ராஜேஷ்சந்திரன், அனைத்துத்தரப்பு அரசியல் கட்சி தலைவர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளின் இன்னிசை கச்சேரி நடந்தது.

Related Stories: