சாக்லெட் கொடுத்து மாணவிகள் பலாத்காரம்; டியூஷன் ஆசிரியையின் தந்தை போக்சோவில் கைது: சட்டீஸ்கரில் கொடூரம்

மும்பை: புனேயில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி போலி கரன்சியை கொடுத்து ரூ. 20 லட்சம் மோசடி செய்த 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ராம்தாஸ் பல்லா என்பவரை தொடர்பு கொண்ட நபர்கள் (வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி), தங்களிடம் ரூ. 40 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும், அந்தப் பணம் வருமான வரிச் சோதனையில் கைப்பற்றப்பட்டது என்றும் கூறியுள்ளனர். மேலும், ரூ. 40 லட்சத்தை வைத்துக் கொண்டு ரூ. 20 லட்சம் கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.

அதனை நம்பிய ராம்தாஸ் பல்லா, ரூ. 40 லட்சம் பணத்தை கொண்டு வருமாறு கேட்டுள்ளார். அதையடுத்து மூன்று பேர் கொண்ட கும்பல் ரூ.40 லட்சத்தை (சிறுவர்கள் கேம் போர்டுகளில் பயன்படுத்தும் டம்மி கரன்சி) கொண்டு சென்றனர். அவர்கள் ரூ. 40 லட்சத்திற்கான ேபாலி கரன்சியை கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்து ரூ. 20 லட்சத்தை வாங்கிக் கொண்டு தப்பினர்.

சில மணி நேரங்கள் கழித்து, ரூ. 40 லட்சம் நோட்டுகளை சரிபார்த்த போது, அவை போலி என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ராம்தாஸ் பல்லா, மோசடி கும்பல் குறித்து போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மூன்று பேர் கும்பலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து போலி ரூ.40 லட்சத்தை கொடுத்து ஏமாற்றிய மூன்று பேரும் பழைய குற்றவாளிகள். இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. தற்போது அவர்கள் மீது மோசடி, போலி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: