டெல்லியில் புதிய கலால் கொள்கை முறைகேடு துணை முதல்வரின் உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் சிசோடியாவின் உதவியாளரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. டெல்லியில் நடைமுறைபடுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வர் சிசோடிய உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக துணை முதல்வர் சிசோடியா வீடு, வங்கி லாக்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையும் நடத்தியது. சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. சோதனைக்கு பிறகு தேவேந்திர சர்மாவிடம் அமலாக்கத்துறை அதிகரிகள் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

* பயத்தால் போலி வழக்கு

சிசோடியா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், , ‘அமலாக்கத்துறை ஒரு போலி வழக்கை பதிவு செய்து எனது வீடு, வங்கி லாக்கர்ஆகியவற்றில் சோதனை செய்தது. அவர்கள் எதையும் கைப்பற்றவில்லை என்பதால் தற்போது எனது உதவியாரை கைது செய்துள்ளது. இதன் பின்னணியில் பின்னால் பாஜவினர் உள்ளனர். ஆம் ஆத்மி மீதான தேர்தல் பயத்தால், இதுபோன்ற போலி வழக்குகளை பதிவு செய்து மிரட்டுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: