விதிமீறல் கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருந்தது ஏன்?.. சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: விதிமீறல் கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருந்தது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. 5,000 சதுர அடி கட்டுமானம் மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12 ஆயிரம் சதுரஅடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டுமானங்களை எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே குடியிருப்பில் வசிக்கை கூடிய விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், 5,000 சதுர அடி கட்டுமானம் மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12 ஆயிரம் சதுரஅடிக்கு கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி, இந்த விதிமீறல்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், மனுதாரருக்கு சொந்தமான தரைத்தளம் மற்றும் முதல் தளத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை அகற்ற கோரி விஜயபாஸ்கர் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் மற்றும்நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, இதனை ஆண்டுகள் கும்பகர்ணன் போல தூங்கிக்கொண்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்டபிறகு திடீரென விழித்துக்கொள்ள காரணம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் கட்டிடத்தை சீல் வைத்த போது அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல்துறை அதிகாரிகள் யார்? என்ற விபரங்களை நவம்பர் 7-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் குடியிருப்பில் விதிமீறி கட்டப்பட்டுள்ள 3-வது தளத்தை தவிர மற்ற 2 தலங்களுக்கும் வைக்கப்பட்டுள்ள சீலை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

Related Stories: