இஸ்ரேல் பிரதமராக மீண்டும் நெதன்யாகு தேர்வு எதிரொலி: பாலஸ்தீனம், அரபு நாடுகளிடையே பரவும் பதற்றம்.. இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு..!!

இஸ்ரேல்: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சவின் நெதன்யாகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், அவரது வெற்றி பாலஸ்தீனியர்கள் மற்றும் அரபு நாடுகளிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் 1948 முதல் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இருக்கிறது. ஆனால் அதன் அருகே இருக்கும் பாலஸ்தீனம் அங்கீகாரத்திற்கு போராடி வருகிறது. இதனால் இருதரப்புக்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது ஏற்படும் தாக்குதல்களில் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலில் உள்ள அரபு கட்சிகள், பொதுவாக வலதுசாரி பிரதமருக்கு ஆதரவு அளித்தது இல்லை. பெஞ்சவின் நெதன்யாகு மீதான கோவம் காரணமாக 2019 முதல் நெதன்யாகுவின் எதிர்தரப்புக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமராக பெஞ்சவின் நெதன்யாகு மீண்டும் தேர்வாகியுள்ளதால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக ஓய்ந்திருந்த இரு தரப்புக்கு இடையேயான மோதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளது. பெஞ்சவின் நெதன்யாகு வெற்றி அறிவிப்பு வெளியான சிறுது நேரத்திலேயே பாலஸ்தீனத்தின் காசா முனையில் இருந்து இஸ்ரேல் தெற்கு நகரங்களை நோக்கி 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை கூறியுள்ளது.

Related Stories: