மயிலாடுதுறை, தஞ்சாவூரில் கனமழை: 3 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழையும், மிக கனமழையும் பெய்தது. நேற்று காலை 8 மணி வரை பெய்த தொடர் மழையால் கொள்ளிடம் அருகே அளக்குடி, நாணல்படுகை, மகேந்திரப்பள்ளி, காட்டூர், கோரை திட்டு, பழையபாளையம் ஆகிய கிராமங்களில் சம்பா நேரடி விதைப்பு பயிர் மீண்டும் மழை நீரில் மூழ்கியது.

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ஆற்றின் கரையோர கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் தண்ணீரில் மூழ்கி அழுகியது. இதனால் கொள்ளிடம் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் மாவட்டம் முழுவதும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. குளிச்சப்பட்டு கிராமத்தில் மட்டும் 100 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், குளிச்சப்பட்டு கிராமத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டார். தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீ  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தரங்கம்பாடி கடல்  நிறம் மாறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அந்த மழை நீர்  உப்பனாற்றில் கலந்து தரங்கம்பாடி கடலில் கலக்கிறது. அதிக அளவில் மழைநீர் கடலில் கலந்திருப்பதால் கடல் நிறம் மாறி ஆற்று நீர்போல காட்சியளிக்கிறது.

Related Stories: