காஷ்மீர் இணைப்பு விவகாரம் கரண் சிங் கட்டுரை: காங். கண்டிப்பு

புதுடெல்லி: காஷ்மீர் இணைப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேருவை விமர்சித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை கண்டிக்காமல், அவருக்கு ஆதரவாக கரண் சிங் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்ட விவகாரத்தில், ‘நேருவின் 5 பிழைகள்’ என்ற தலைப்பில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜுஜூ சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். நேருவை விமர்சித்த ரிஜுஜூக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழில் ஜம்மு காஷ்மீரின் மன்னர் ஹரி சிங்கின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கரண் சிங், ஜம்மு காஷ்மீர் இணைப்பு குறித்து கட்டுரை எழுதியுள்ளார்.

 

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ வி.பி.மேனன் கூட ஹரி சிங்கை தவறான மனிதராக சித்தரிக்கவில்லை. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், நேரு மீதான ரிஜுஜூவின் விமர்சனத்தை கரண் சிங் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியுள்ளார். நேருவின் ஆதரவு இல்லாமல் கரண் சிங்கால் பெரிதாக எதையும் சாதித்திருக்க முடியாது. 1948-64ல் இருவருக்கும் இடையே 216 கடிதங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக 2006ம் ஆண்டு எழுதிய புத்தகத்தில் கரண் சிங் கூறியுள்ளார். இதே நேருவுக்குதான் கடந்த 1962ல் தான் எழுதிய அரபிந்தோ புத்தகத்தை கரண் சிங் அர்ப்பணித்தார்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: