பாலம் விபத்து விசாரணை மந்தம் இதுவும் கடவுள் செயலா? மோடிக்கு கார்கே கேள்வி

புதுடெல்லி: ‘மோர்பி பாலம் விபத்தும் கடவுளின் செயலா?’ என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம், மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து 135 பேர் பலியான விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு வருமாறு: மோர்பி பாலத்தில் துருபிடித்த கேபிள்கள் சரி செய்யப்படவில்லை. பயன்பாட்டுக்கு ஏற்றது என்ற சான்றிதழ் பெறாமல், அக்டோபர் 26ம் தேதி பாலம் திறக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்ததாரர் இந்த பணிக்கு தகுதி இல்லாதவர். இந்த மோசமான சம்பவத்துக்கு முதல் நாள்தான் பாலம் திறக்கப்பட்டுள்ளது என்பது மாநகராட்சி தலைவருக்கு தெரியும். 130க்கும் மேற்பட்டோர் இறந்தும் பாலத்தை புதுப்பித்த ஒப்பந்ததாரர், மாநகராட்சி அதிகாரிகள் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவும் கடவுளின் செயலா? மெத்தனமான விசாரணையை நடத்தும் குஜராத் அரசை மோடி கண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: