தெலுங்கானாவில் 57வது நாளாக ஒற்றுமை நடைபயணம்: பழங்குடி மக்களுடன் பாரம்பரிய 'திம்சா'நடனமாடி ராகுல்காந்தி உற்சாகம்..!!

சங்கராரெட்டி: தெலுங்கானாவில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார். நாடு முழுவதும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, சங்கராரெட்டி மாவட்டம் ருத்ராராம் என்ற இடத்தில் இருந்து இன்றைய பயணத்தை தொடங்கினார். முன்னதாக ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க திம்சா நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார்.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய ராகுல், கேரளா, கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 57வது நாளாக பயணத்தை தொடர்ந்து வருகிறார். இப்பயணத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், இளைஞர்களும் அவருடன் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: