செல்லம்பட்டியில் இருந்து 5 கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மின்வசதி இல்லை-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஒரத்தநாடு : ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால் 5 கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில்- இருந்து கருப்பட்டிப்பட்டி, அய்யம்பட்டி, பாச்சூர், நாயக்கர்பட்டி, பொய்யுண்டார்கோட்டை போன்ற கிராமங்களுக்கு செல்லும் ஒரே முக்கிய சாலையாக இருந்து வருகிறது, இந்த சாலை கல்லனை கால்வாய் ஒரத்திலையே இருக்கிறது. சுமார் 2 கி.மீ தூரம் இருக்கும் இந்த சாலையில் பல ஆண்டுகளாக முறையான மின் விளக்கு வசதி இல்லாததால் 5 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

செல்லம்பட்டியில் தான் தஞ்சாவூருக்கு செல்ல அதிக பேருந்து வசதிகள் உள்ளது.. இந்த 5 கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் தஞ்சாவூர் வேலைக்கு சென்று இரவு 8 மணி 9 மணி 10 மணிக்கு கூட சிலர் வேலையை முடித்து விட்டு ஊருக்கு செல்ல செல்லப்பட்டிக்கு வரும் பேருந்தில் பயணம் செய்கிறார்கள்.இந்த பேருந்துகள் செல்லம்பட்டி மட்டும் வரும் நிலையில் இந்த 5 கிராமத்தை சேர்ந்த பெண்கள் இரவில் சுமார் 2.5 தூரம் நடந்து செல்லும் வழியில் முறையான மின் விளக்கு வசதி இல்லாததால் ஆற்றில் தவறி விழும் ஏற்படுவதோடு,பாம்புகளின் தொல்லையும் ஏற்படுகிறது.

இரவில் கடும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திடீரென தஞ்சாவூருக்கு போக வேண்டும் சூழல் ஏற்படும் போது கூட இந்த இரவில் தான் நடந்தே சென்று வருகின்றனர். அதிக கடை வசதி மருத்துவ க்ளினிக் ஏ.டி.ம் போன்ற முக்கியமான வசதிகள் செல்லம்பட்டியில்தான் இருப்பதால் இந்த 5 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்... இதனால் இப்பகுதியில் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு ஆற்றில் தவறியும் விழுகின்றனர்.

எனவே சுமார் 300 மீட்டர் அளவில் ஆற்று ஓரத்தில் தடுப்புகள் வைப்பதோடு மின் விளக்கு வசதியும் ஏற்படுத்தி தருமாறு \”கிராமங்களையும் கொஞ்சம் கவனியுங்க \”என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: