சீனாவில் லாக்டவுனுக்கு பயந்து வேலி தாண்டி ஓடும் ஐபோன் ஊழியர்கள்; வீடியோ வைரல்

பீஜிங்: சீனாவில் கொரோனா லாக்டவுனுக்கு பயந்து ஐபோன் நிறுவன ஊழியர்கள் வேலி தாண்டி குதித்து சொந்த ஊருக்கு தலைதெறிக்க ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சீனாவின் செங்க்சோவ் பகுதியில் ஆப்பிள் நிறுவத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவத்தின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 3 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். தற்போது, சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், ஐபோன் தொழிற்சாலையில் உள்ள பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு பணியாற்றும் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இதன் காரணமாக தொழிற்சாலையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆலையில் சிக்கிக் கொண்டால், வீடு போக பல மாதமாகும் என பயந்த ஊழியர்கள் சிலர் தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பிச்சென்ற வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. லாக்டவுன் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால், ஊழியர்கள் நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

Related Stories: