சின்னாளபட்டியில் ஒரு கிலோ குறவை மீன் ரூ 250

*பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்சின்னாளபட்டி : சோழவந்தான் பகுதி கண்மாய் குறவை மீன் சின்னாளபட்டியில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ குறவை மீன் ரூ.250க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். தமிழக மக்களின் மீன் உணவு வகைகளில் விரால், வஞ்ஜரமீன், நெய்மீன், ஊழி மீனுக்கு அடுத்தபடியாக தமிழக மக்கள் அதிக அளவில் விரும்பி உண்பது குறவை மற்றும் கெண்டை மீன்களே. பெரும்பாலும் குளங்கள், கண்மாய்களில் அதிக அளவில் காணப்படும் குறவை மீன் வருடத்திற்கு ஒருமுறைதான் விற்பனைக்கு வரும். தற்போது சோழவந்தான் பகுதியில் உள்ள கன்மாய்கள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் குறவை மீன்கள் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மற்றும் செம்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் பிடிக்கப்படும் மீன்கள் வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் உயிருடன் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவதால் இந்த மீனை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விரால் மீன் போல தோற்றம் அளிக்கும் குறவை மீன் ஒரு கிலோ ரூ.250க்கு கிடைப்பதால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். சின்னாளபட்டியில் தினசரி குறவை மீன்களை கொண்டுவந்து மீன் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்….

The post சின்னாளபட்டியில் ஒரு கிலோ குறவை மீன் ரூ 250 appeared first on Dinakaran.

Related Stories: