கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!

உதகை: கடந்த மே 7ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் அனைவரும் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை 1,09,675 வாகனங்களும்,7,14,811 சுற்றுலாப்பயணிகளும் கொடைக்கானலுக்கு வந்து சென்றதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் முறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

 

The post கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை! appeared first on Dinakaran.

Related Stories: