சத்துணவு, அங்கன்வாடி மைய பணியாளர் கருத்து கேட்பு கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: தமிழகம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஒரு மாணவருக்கு உணவூட்டம் செலவு 5 ரூபாய் உயர்த்தி வழங்கவேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தவேண்டும், ஓய்வூதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கூட்டமைப்பு சார்பில் பேரணி நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட தலைவர் கன்னியப்பன் தலைமையில் நடந்தது. முன்னாள் மாநில தலைவர் எத்திராஜன் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய நிர்வாகிகள் இளவரசி, செராபின் ஆரோக்கிய மேரி, குன்றத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் அமுதா, கோமளா, இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்,  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சந்திரசேகரன், ஒருங் கிணைப்பாளர் கண்ணன், துணை ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன், ஆலோசகர் பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் கண்ணகி, கூட்டமைப்பு மாநில பொருளாளர் ஆறுமுகம், உயர் மட்ட குழு உறுப்பினர்கள் குணசேகரன், சரவணபெருமாள், ஷெர்ஷாத், துணை ஒருங்கிணைப்பாளர் கற்பகம் ஆகியோர் கலந்துகொண்டு பேரணி குறித்து விளக்கி பேசினார்.  இதில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: