வாஷிங்டனில் இந்துக்கள் படுகொலை நினைவிடம்: முன்னாள் அதிபர் டிரம்ப் வாக்குறுதி

புளோரிடா: ‘அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் நினைவாக வாஷிங்டனில் நினைவிடம் அமைக்கப்படும்,’ என்று முன்னாள் அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள், இந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகளில் ஏராளமான இந்தியர்கள், இந்துக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா நகரில் உள்ள மார் எ லாகோ விடுதியில் குடியரசுக் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், `கடந்த 2016, 2020 அதிபர் தேர்தலில் இந்துக்கள், இந்தியர்கள், இந்தியாவின் ஆதரவு குடியரசு கட்சிக்கு கிடைத்தது. அவர்களின் வாக்குகளால் நானும் வெற்றி பெற்றேன்.

படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் நினைவாக வாஷிங்டனில் நினைவிடம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக அங்கீகரிக்கிறேன். 2024 அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், ஐநா.வில் இந்தியாவின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பேன்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: