பாலக்காட்டில் நெல் அறுவடை சீசன் துவக்கம்: தமிழக இயந்திரங்களுக்கு மவுசு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில் நெல் அறுவடை சீசன் துவங்கியுள்ளதால் தமிழகத்திலுள்ள அறுவடை இயந்திரங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

நெல்களஞ்சியமான பாலக்காடு மாவட்டத்தில் முதல்போக நெல் அறுவடை தொடங்கி உள்ளது. கடந்த காலங்களை போல் அறுவடைக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக கேரள விவசாயிகள்  தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தங்களது நிலங்களில் பயிரிட்டுள்ள நெல்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

ஒரு மணிநேரத்திற்கு ரூ.1000 முதல் ரூ. 2 ஆயிரம் ரூபாய் வரை அறுவடை இயந்திரத்திற்கு வாடகைச் செலுத்தி அறுவடை செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலரவைத்து, பதப்படுத்தி எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா, பெரும்பாவூர், ஆலப்புழா ஆகிய இடங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

Related Stories: