கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ‘கப்ளிங்’ துருபிடித்து துண்டானதால் இரண்டரை மணி நேரம் நிறுத்தம்: நாகர்கோவிலில் பயணிகள் அவதி

நாகர்கோவில்: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு, 15 நிமிடம் தாமதமாக காலை 5.20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பயணிகள் இறங்கிய பின்னர்,  ரயில் புறப்பட்டது. அப்போது ரயில் இன்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியும், பிற பெட்டிகளுடன் கப்ளிங் துண்டிக்கப்பட்டு தனியாக நின்றது. உடனே ரயில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்திவிடப்பட்டது. பின்னர் உடைந்த இணைப்புகொண்ட பெட்டியை தனியே கழற்றி விட்டு இதர பெட்டிகளை இணைத்து காலை 7.40க்கு ரயில் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றது. ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது  கப்ளிங் உடைந்திருந்தால்,  இன்ஜின் ஒரு பெட்டியுடன் தனியாக ஓடிக்கொண்டிருக்கும். இதர பெட்டிகள் நடுவழியில் நின்றிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். 

Related Stories: