பொள்ளாச்சி வன கோட்டத்தில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்த்திற்குட்பட்ட பொள்ளாச்சி வனகோட்டத்தில், கோடைகால வனவிலங்கு கனக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனகோட்டம், உடுமலை வனக்கோட்டம் என இரண்டு கோட்டங்களிலும் மொத்தம் 6 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை,புலி,யானை,சிங்கவால் குரங்கு,மான்,வரையாடு,காட்டுபன்றி,காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசிக்கின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி கோட்ட வனபகுதிகளில்,கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புலிகள் கணக்கெடுப்பு நடந்தது.

அந்நேரத்தில் புலிகள் கணக்கெடுப்பு மட்டுமின்றி,கண்ணில் தென்பட்ட விலங்குகளின் கணக்கெடுப்பும் நடந்தது.இதை தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக கடந்த 23ம் தேதி கோடை கால வனவிலங்கு கனக்கெடுப்பு பணி துவங்கியது. பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வனப்பகுதியில் நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வனக்காப்பாளர்,வேட்டைத்தடுப்பு காவலர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.அவர்கள் திசைகாட்டும் கருவி, நிலைமானி, தூரம் அளக்கும் கருவி, கயிறு உள்ளிட்டவைகள் பயன்பாட்டுக்கு வைத்திருந்தனர்.

வனவிலங்கு கணக்கெடுப்பின்போது, யானை மற்றும் கடமான்கள் அதிகம் கண்ணில் தென்பட்டுள்ளது. டாப்சிலிப்,போத்தமடை உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் கால் தடம், எச்சம் இருந்துள்ளது. வனவிலங்கு கணக்கெடுப்பை, இணை இயக்குனர் மற்றும் அந்தந்த பகுதி வனச்சரகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்தார். கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில். விலங்குகளின் கால்தடம்,முடி உதிர்தல், எச்சம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை சேகரித்து,ஆய்வுக்கு அனுப்பும் பணி நடப்பதாகவும், தடயங்களை கொண்டு எந்தெந்த வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என கணக்கிடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி வன கோட்டத்தில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: