அரியானாவில் நாளை முதல் 2 நாட்கள் மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

புதுடெல்லி: அரியானா மாநிலத்தில் நாளை அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகின்றார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநிலங்களை சேர்ந்த உள்துறை அமைச்சர்களின் 2 நாள் மாநாடு அரியானாவின் சூரஜ்கண்ட்டில் நாளை தொடங்குகிறது. அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் ஆயுத காவல் படை, காவல்துறை அமைப்புக்களின் இயக்குனர் ஜெனரல்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்த ஐந்து உறுதிமொழிக்கு இணங்க, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கொள்கை உருவாக்கத்திற்கான முயற்சியாகும். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் உரையாற்றுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. இம்மாநாட்டில்  காவல்துறை நவீனமயமாக்கல், சைபர் கிரைம் மேலாண்மை, குற்றவியல் நீதிஅமைப்பில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தில் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். பெரும்பாலான மாநிலங்களில் உள்துறை அமைச்சக இலாகா முதல்வர்களிடம் உள்ளது. இதனால், அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Related Stories: