ராஜபாளையம் மேற்கு மலை தொடர்ச்சி அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக்க பொதுமக்கள் கோரிக்கை

ராஜபாளையம் : ராஜபாளையம் மேற்கு மலை தொடர்ச்சி அய்யனார் கோவில் பகுதியை சுற்றுலாத்தலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு மலை தொடர்ச்சி அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலாத்தலம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் அறிவித்து நீர்வீழ்ச்சிக்கு செல்லக்கூடிய பாதை மற்றும் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை தொடங்கும் நிலையில் அதனை அடுத்து அதிமுக ஆட்சியில் திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றாமல் பல லட்சம் செலவில் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா முதல் மேற்கு மலை தொடர்ச்சி அய்யனார் கோயில் வரை பாலங்கள் மற்றும் சாலைகள் தடுப்பு சுவர்கள் அமைத்து சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட

அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சி பகுதியை எந்த ஒரு பணிகளும் செய்யாமல் சாலைகளை மட்டும் அமைத்து விட்டு சென்று விட்டனர்.

தற்போது மேற்கு மலை தொடர்ச்சி அய்யனார் கோவில் பகுதியில் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில் நீர் வரத்து வரும் சூழலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் வனத்துறையினர் வேலிகளை அமைத்து பாதுகாத்து வருகின்றனர். ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ள நீர் காத்த அய்யனார் சுவாமி திருக்கோயிலிற்கு வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமை பக்தர்களுக்கு நீர் வரத்து குறைவாக உள்ள நேரத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் உள்ளூர் வாசிகள் மேற்கு மலை தொடர்ச்சி நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளுக்கு குவிய தொடங்கினர் வனத்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஆங்காங்கே செல்லக்கூடிய ஆற்றுப் பகுதியில் ஆபத்தான நிலையில் குளித்திச் சென்றனர். பல லட்சம் செலவில் சாலைகள் அமைத்து பயனற்ற நிலையில் உள்ள மேற்கு மலை தொடர்ச்சி அய்யனார் கோவில் பகுதியை நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லவும் பூங்காக்கள் அமைத்து அறிவிக்கப்பட்ட சுற்றுலா தளத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories: