மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் ஆந்திரா செல்ல குவிந்த பயணிகள்

திருவொற்றியூர்: தீதீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாதவரம் புறநகர் ஆந்திரா பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, சூலூர்பேட்டை ,கடப்பா மற்றும் திருவள்ளூர், பழவேற்காடு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாதவரம் , மணலி,செங்குன்றம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மாதவரம் புறநகர் ஆந்திரா பேருந்து நிலையம் வந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர்.

இவ்வாறு செல்லக்கூடிய பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, கொளத்தூர் காவல் ஆணையர் ராஜாராம், தலைமையில், புழல் காவல் உதவி ஆணையர் ஆதிமூலம்,மாதவரம் காவல் இன்ஸ்பெக்டர் காளிராஜ் ஆகியோர் மாதவரம் ஆந்திரா பேருந்து  நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் வெளியூர் செல்லும் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் மற்றும் பயணத்தின் போது தங்கள் உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: