பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர் காப்பீட்டுத் தொகை: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர் காப்பீடு தொகை செலுத்தப்படவில்லை. மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் தருவதாகச் சொன்ன 481 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையும் போதுமானதாக இல்லை. காப்பீட்டு நிறுவனங்கள் அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 2021 ம் ஆண்டில் காப்பீடு செய்த நிலையில் அந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் பயிர் காப்பீடு செய்து இழப்பீட்டை எதிர்நோக்கியிருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகையை இனியும் காலம் தாழ்த்தாமல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: