நைஜீரியாவில் 36 பேர் சுட்டுக் கொலை: இரு சமூகத்தினர் இடையே மோதல்

நைஜீரியா: மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வடமத்திய நைஜீரியா அடுத்த பென்யூ மாநில கிராமத்தில் ஜிபேஜி சமூகத்தை சேர்ந்த குழுவினருக்கும், அதேபகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கும் இடையே நீர்நிலைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை பயன்படுத்துதல் தொடர்பாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜிபேஜி சமூகத்தினர், குறிப்பிட்ட அந்த கிராமத்திற்குள் புகுந்து அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 36 பேர் பலியானதாகவும், இரண்டு போலீசார் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மற்றொரு பகுதியில் இதேபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: