கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1338 கோடி அபராதம்

புதுடெல்லி:  கூகுள் நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.1337.76 கோடி அபராதம் விதித்துள்ளது. விதிகளை மீறியும், சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளின் கீழ், கூகுள் நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.1337.76 கோடி அபராதமாக விதித்துள்ளது. மேலும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அது எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், `குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கூகுள் நிறுவனம் தனது நடவடிக்கைகளை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளது.

Related Stories: