குஜராத் பாதுகாப்பு கண்காட்சியில் ரூ.1.53 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

காந்திநகர்: குஜராத்தில் நடந்த பாதுகாப்பு துறை கண்காட்சியில் ரூ.1.53 லட்சம் கோடிக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குஜராத் மாநிலம், காந்தி நகரில் பாதுகாப்பு துறையின் 12வது கண்காட்சி கடந்த 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளை வரும் நடக்கும் இதில், ஆயுதம் தொடர்புடைய கண்காட்சியை நேற்று முன்தினம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ராணுவ தளவாட கம்பெனிகள் நீண்டநாள் செயல்படுவதற்கு ஏற்றுமதி முக்கியம்.

இதை கருத்தில் கொண்டு வரும் 2025ம் ஆண்டுக்குள் இதில் ரூ.41 ஆயிரம் கோடிக்கு ஆயுதம், தளவாடங்களை ஏற்றுமதி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது,’’ என்றார். பின்னர், அமெரிக்க-இந்திய ராணுவ ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசும்போது,‘‘ எனது பார்வையில் தற்போதைய காலம் பாதுகாப்புத் துறைக்கு ஒரு பொற்காலம். போர், விமானம், கப்பல், போர் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதன் மூலம் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தி உள்ளது,’’ என்றார். இந்நிலையில், இந்த கண்காட்சியின் போது கடந்த 2 நாட்களில் ரூ.1.53 லட்சம் கோடிக்கான 451 புதிய ஆயுத, தளவாட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Related Stories: