வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: 22ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு,  வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறி வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் நிலை கொள்ளும் என்றும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

அந்தமானையும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 23ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Related Stories: