லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஷாகித்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை: இந்தியா, அமெரிக்கா முயற்சி தோல்வி

ஐ.நா: சர்வதேச தீவிரவாதியாக லஷ்கர்-இ-தொய்பா தலைவனை அறிவிக்க ஐ.நாவில் இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை சீனா தடுத்து நிறுத்தியது. உலகளவில் தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகளும், ஐ.நாவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பாவின் நிதி திரட்டல் மற்றும் ஆதரவு நெட்வொர்க்குகளை சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல் கொய்தா தடைக் குழுவின் கீழ் கராச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஷாகித் முகமதுவை உலக பயங்கரவாதியாக கருப்பு பட்டியலில் சேர்க்க ஐநாவில் இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டு வந்த முன்மொழிவை சீனா நிறுத்தி வைத்தது.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பலியான அமெரிக்க குடிமக்கள் உட்பட 160 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில், இந்த தீர்மானத்தை சீனா நிறுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களில் கருப்பு பட்டியலில் தீவிரவாதிகளை சேர்ப்பது குறித்து கொண்டு வரப்பட்ட முன்மொழியை சீனா நிறுத்துவது இது 4வது முறையாகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினரான சீனா, அசாரை தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை தடுக்கிறது.

Related Stories: