ஆம்பூர் அருகே பச்சகுப்பத்தில் 3வது முறையாக தரைப்பாலத்தை மூழ்கடித்த பாலாற்று வெள்ளம்

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே பச்சகுப்பத்தில் உள்ள பாலாற்று தரைப்பாலம் வெள்ளபெருக்கு காரணமாக மூன்றாவது முறை நீரில் மூழ்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில்  பரவலாக பெய்து வரும் கனமழை, ஆந்திரமாநில எல்லைபகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பத்தில் நேற்று முன் தினம் இரவு  தொடர்மழையால் வெள்ளபெருக்கு அதிகரித்து காணப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளநீர் கானாறுகளில் பெருக்கெடுத்து ஓடி பாலாற்றில் கலந்தது.

இந்த வெள்ளத்தால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து தற்போது பச்சகுப்பத்தில் உள்ள பாலாற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கடித்தபடி வெள்ளநீர் பாய்ந்தோடியது. இதனால் இந்த தரை பாலத்தை கடக்க முயல்வோர் எச்சரிக்கையுடன் கடக்க அப்பகுதியினர் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த இரு மாத காலத்தில் தற்போது மூன்றாம் முறையாக இந்த தரைபாலம் மூழ்கடித்தபடி வெள்ளநீர் ஓடுவதாக அப்பகுதியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: