கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் அட்டைதாரரை அடையாளம் காணும் முறை அமல்: அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர்..!!

சென்னை: கூட்டுறவு, உணவு பாதுகாப்புத்துறை கீழ் இயங்கும் நியாயவிலை கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் அட்டைதாரரை அடையாளம் காணும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கண் கருவிழி மூலம் ரேசன் பொருள் வினியோகிக்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர். சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் நியாய விலை கடைகளில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ரேசன் கடைகளில் கைரகை சரிபார்ப்பு மூலம் ஏற்கனவே பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, அரியலூரில் சோதனை அடிப்படையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

பொதுமக்களின் வரவேற்புக்கு ஏற்ப புதிய திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேசன் கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேடு இயந்திரத்தில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதால், மின்னணு பதிவேட்டுக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories: