உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய வயாக்ரா கொடுத்து வெறியேற்றும் ரஷ்யா: ஐநா குற்றச்சாட்டு

பாரிஸ்: உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய தனது வீரர்களுக்கு ரஷ்யா வயாக்ரா மாத்திரை கொடுத்து உற்சாகப்படுத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. போரை நிறுத்த ஐநா பொதுசபை, பாதுகாப்பு சபையில் நடத்திய வாக்கெடுப்புகளில் சில வெற்றி பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் பல சந்தர்ப்பங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்து வந்துள்ளது.

இந்நிலையில், பாலியல் வன்முறை தொடர்பான ஐநா.வின் சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பாட்டன், உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய தனது வீரர்களுக்கு ரஷ்யா வயாக்ரா வீரிய மாத்திரைகளை கொடுத்து உற்சாகப்படுத்துவதாக குற்றம்சாட்டி உள்ளார். `போரினால் பாதிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே மனிதாபிமானமற்றவர்களாக நடத்தும் உத்தியாக ரஷ்யா இதனை பயன்படுத்துகிறது. ரஷ்ய ராணுவத்தினரிடம் வயாக்ரா மாத்திரைகள் இருப்பதை பெண்களே உறுதிப்படுத்தி உள்ளனர்,’ என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: