ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தலைமை செயலாளர் திடீர் ஆய்வு செய்தார். சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகின்றனர்.  நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் இந்த மருத்துவமனை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும்.  

இந்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி  மருத்துவமனைக்கு நேற்று  காலை 11.15 மணியளவில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வந்து மருந்து சீட்டு வழங்கும் இடங்களில் இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் 3-வது டவரில் உள்ள மருந்தகம், வார்டுகளை தலைமைச் செயலாளர்  நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

Related Stories: