பஞ்சாப் போலீஸ் அலுவலகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய தீவிரவாதி மும்பையில் கைது

மும்பை: பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய தீவிரவாதி மும்பையில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள போலீஸ் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது, கடந்த மே மாதம் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் இல்லை. ஆனால், கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்த தாக்குதலுக்கு, சீக்கியருக்கான நீதி (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக அப்போது அறிவித்தது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக, மும்பை மலாட் பகுதியை சேர்ந்த சரத்சிங் என்ற இந்திரஜித் சிங் காரிசிங் என்ற கராஜ் சிங் (30) என்பவரை, மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புபடையினர் நேற்று கைது செய்தனர். சரத்சிங் மீது 8 வழக்குகள் உள்ளதாகவும், பஞ்சாபில் உள்ள கபுர்தாலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மார்ச் மாதம் 2 மாத பரோலில் வெளிவந்தார். தற்போது கனடாவில் பதுங்கியியுள்ள தீவிரவாதி லக்பீர் சிங் லண்டாவுடன் தொடர்பில் இருந்ததுள்ளார் என தீவிரவாத தடுப்புப்படை அதிகாரிகள் கூறினர்.

Related Stories: