கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜா குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம், நாங்குநேரி காவல் நிலையத்துக்குட்பட்ட மஞ்சங்குளத்தை சேர்ந்த முத்து மகன் சாமிதுரையை (26) கடந்த ஆக.29ல் ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. இவ்வழக்கில் தொடர்புடைய திசையன்விளை ஆணைகுடியை சேர்ந்தவரும் பனங்காட்டு படை கட்சி தலைவருமான ராக்கெட் ராஜாவை நாங்குநேரி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நாங்குநேரி ஏஎஸ்பி ரஜத் சதூர்வேதி, டிஎஸ்பி ஆனந்த்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர் மீது 5 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. பின்னர் ராக்கெட் ராஜா பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாங்குநேரி ஏடிஎஸ்பி ரஜத் சதூர்வேதி அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: