தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கான ஐகோர்ட் தலைமை நீதிபதி நியமனம் தாமதம்: ஒன்றிய அரசு அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு

சென்னை: கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கொலீஜியத்தின் கூட்டம் நடந்தது. இதையடுத்து சென்னை, கர்நாடகா உட்பட 6 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை பரிந்துரை செய்திருந்தது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.முரளிதரரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒன்றிய அரசு தரப்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீர்-லடாக் ஆகிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பரிந்துரைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை நிலுவையில் உள்ளது. இதில் ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.பிவராலே கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.மேக்ரே ஜம்மு காஷ்மீர் மற்றும் கூடுதலாக லடாக்கின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: