சோழர் பாசன திட்டத்தை வலியுறுத்தி அரியலூரில் 2 நாள் நடைபயணம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் சராசரி மழை அளவான 937 மி.மீட்டரை விட அதிகமாக 954 மி.மீட்டர் மழை அரியலூர் மாவட்டத்தில் பெய்கிறது. ஆனாலும், அரியலூர் மாவட்டம் வறண்ட மாவட்டமாக நீடிப்பதற்கு காரணம் அம்மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் பயனற்றுப் போய் விட்டது தான். சோழ மன்னர்கள் ஏற்படுத்திய நீர்ப்பாதைகள் காலப்போக்கில் அவை முறையாக பராமரிக்கப்படாததால் சோழகங்கம் ஏரி அதன் பரப்பளவில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இழந்து விட்டது. அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வரும் 29ம் தேதி (சனிக்கிழமை), 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களும் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். அரியலூர் மாவட்டத்தின் கீழப்பழுவூரில் தொடங்கும் எழுச்சி நடைபயணம் காட்டுமன்னார்கோவில் என்ற இடத்தில் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: