நைஜீரியாவில் வெள்ளப் பெருக்கு; படகு கவிழ்ந்து 76 பேர் பலி

லாகோஸ்: நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்பிராவில் பலத்த மழை பெய்து வருகிறது. கால்வாய், ஆறுகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதற்காக மக்கள் படகுகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனம்பிராவின் ஓக்பாரு பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு  மத்தியில் மக்கள் சென்ற படகு சிக்கியதால் அதில் பயணம் செய்த பலர் நீரில் மூழ்கினர்.

முதற்கட்ட விசாரணையில் 10 பேர் இறந்ததாகவும், 60  பேர் மாயமானதாவுகம் கூறப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நைஜீரியாவின் ஜனாதிபதி முஹம்மது புஹாரி வெளியிட்ட அறிக்கையில், ‘படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: