வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் தடுப்பு கம்பி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் :  வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் தடுப்பு கம்பி உள்ளதால், அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சென்டர் மீடியம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பெங்களூரு செல்லவும், மறுபுறம் சென்னைக்கு செல்லவும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.

இந்நிலையில், வேலூர் வள்ளலார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் இரும்பு தடுப்பு வேலி உடைந்துள்ளது. உடைந்து கிடக்கும் தடுப்பு கம்பி சாலையின் வெளியே தொங்கிய நிலையில் இருந்து வருகிறது. இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வேகமாக வரும் வாகனங்களுக்கு அந்த கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த உடைப்பை பயன்படுத்தி ஆபத்தான முறையில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்களும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து அதை சீர்செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: